அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு 40 சதவீதமாக அதிகரிப்பு

நியூயார்க்:

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று 14 நாட்களை கடந்துள்ள நிலையில், அவரின் செயல்பாடுகள் பலருக்கும் அதிருப்தி அளித்து வருகிறது. டிரம்பிற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் அமெரிக்காவிற்கு யார் அதிபராக வரவேண்டும் என்பது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

அதில், ‘‘அமெரிக்க மக்களில் 53 சதவீதம் பேர் பராக் ஒபாமாவே மீண்டும் அதிபராக வரவேண்டும். இதற்கு அடுத்தபடியாக டிரம்ப் 43% பேர் ஆதரித்துள்ளளனர். மேலும் 35% பேர் கடந்த வாரம் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது தற்போது 40% ஆக அதிகரித்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பை டிரம்புக்கு தெரிந்திருந்தால் அதிர்ச்சியடைந்திருப்பார். டிரம்ப் அறிவித்த முஸ்லிம்கள் தடை விவகாரத்தில் வெறும் 26% பேர் மட்டுமே ஆதரித்துள்ளனர். 48% மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் டிரம்பிற்கு எதிரான போராட்டங்களுக்கெல்லாம் மூல காரணம் ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளரும் செல்வந்தருமான ஜார்ஜ் சாரஸ் என டிரம்ப் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.