மின்வாரியத்தில் 40ஆயிரம் பணியிடங்கள் காலி: மின்வாரிய மாநாட்டில் தகவல்

சென்னை:

மிழகம் முழுவதும் மின்சார வாரியத்தில் சுமார் 40ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்ப தாகவும், அதை உடனே நிரப்ப வேண்டும் என்றும் மின்வாரிய எம்ப்ளாயீஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு எலக்ட்ரி சிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் மாநில மாநாடு நடைபெற்றது.  சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு  விழா அரங்கத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு பெடரே ஷன் தலைவர் எஸ்.மணிகண்டன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் கே.செல்வராஜூ வரவேற்றார். து செயலாளர் ஏ.சேக்கிழார் கோரிக்கை விளக்க உரையாற்றி னார். மாநாட்டு மலரை அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்டு பேசினார்.

மின்சார வாரிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மின்சார வாரியத்தில் காலி பணியிடங்கள் சுமார் 40,000க்கு மேல் உள்ளது.  20,000க்கும் மேற்பட்ட களப்பணி காலி பணியிடங்கள் பல்லாண்டுகளாக இருந்து வருகிறது.  மின்சார வாரிய அன்றாட பராமரிப்பு பணிகளுக்கு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.

களப்பணி காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப தேவையான நடவடிக்கையை மின்சார வாரியம், தமிழக அரசு எடுக்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வைக்க வேண்டும்.

மின்சார வாரியத்தில் பணிக்கு சேர்ந்ததில் சீனியர் சுமார் 500 மின்பாதை ஆய்வாளர்கள் பல்வேறு மின் வட்டங்களின் பதவி உயர்வின்றி ஓய்வு பெறும் நிலையில் உள்ளார்கள். இவர்களை விட ஜூனியர்கள் குறிப்பிட்ட கல்வி தகுதியுடன் இருந்ததால் அடுத்த பதவி உயர்வுக்கு முந்தி சென்றுள்ளனர்.

எனவே, பதவி உயர்விலிருந்து தேக்க நிலையில் உள்ள மின்பாதை ஆய்வாளர்களை மின் நிலை ஆக்க முகவராக தரம் உயர்த்திட வேண்டும்.

மின்சார விநியோகத்தில் தனியார் மயம் தமிழ்நாடு மாநிலத்தில் காலூன்றுவதை தடுத்திட வேண்டும்.

குறிப்பாக நாங்குநேரில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு தனியார் கம்பெனி மின்சாரம் வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தை நிறுத்தி, தமிழ்நாடு மின்சார வாரியமே சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும்/

இவ்வாறு மொத்தம்  14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன