பீகார் : மதுவிலக்கு மீறல் குற்றத்துக்காக 400 காவல் அதிகாரிகள் பணி நீக்கம்

பாட்னா

துவிலக்கு சட்டத்தை மீறியதாக பீகாரில் 400 காவல்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள அரசு பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமுல் படுத்தியது. அது முதல் மாநிலம் முழுவதும் மதுவிலக்கை மீறியதாக பலரை காவல்துறை பிடித்து தண்டனை அளித்து வருகிறது.

மாநில அரசு இந்த மது விலக்கு விவகாரத்தில் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில காவல்துறை தலைவர் திவிவேதி கூறி உள்ளார். மேலும், “மது விலக்கு குறித்து இதுவரை 1 லட்சம் இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் சுமார் 16 லட்சம் லிட்டர் அளவுக்கு வெளிநாட்டு மது வகைகளும் 9 லட்சம் லிட்டர் அளவுக்கு நாட்டு சாராயமும் பிடிபட்டுள்ளன.

இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் மதுவிலக்கை மீறியதாக கைது செய்யப்பட்டுளனர். அதில் 400 பேர் காவல்துறை அதிகாரிகள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யபட்டுள்ளனர். அத்துடன் சட்ட விரோதமாக மதுவை கடத்தி வந்த வழக்கில் 141 பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 400 Bihar police officers dismissed for violating liquor ban
-=-