400 குமரி மாவட்ட மீனவர்கள் மாயம்: விமானம் மூலம் தேடுதல் பணி தொடக்கம்

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் இன்னும் 400 பேர் கரை திரும்பாத நிலையில், அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கடற்படை விமானம் மூலம் தேடுதல் வேட்டை தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும்,  அரபிக்கடல், வங்காள விரிகுடா கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தால் கனமழை மற்றும் சூறைக்காற்று வீசும், அதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்  என வானிலை மையம் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தது.

அரபிக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் அரபிக்கடல் பகுதியில் மீன பிடிக்க சென்ற வர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்கு தளமாக கொண்டு இந்த பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் குமரி, கேரளா அரபிக்கடலில் ஆழ்கடலில் சுமார் 10-முதல் 15-நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். வானிலை மையம் மற்றும் தமிழக அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து பெரும்பாலான மீனவர்கள்  கரை திரும்பிய நிலையில், தங்கு கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற சுமார 400 குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த  மீனவர்கள்  இதுவரை கரை திரும்ப வில்லை என கூறப்படுகிறது. அவர்கள் நிலை என்னவானது என்று பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், அவர்களை விமானம் மூலம் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடலில் தங்கி யிருந்து மீன்பிடித்து  மீனவர்களுக்கு, ஹெலிகாப்டர், ராணுவ கப்பல், சேட்டிலைட் போன் மற்றும் தனியார் கப்பல்கள் மூலம் தகவல் அளிக்கவும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.