டெல்லியில் கண்காணிக்கப்பட்டு வந்த 406 பேருக்கும் கொரோனா இல்லை: மருத்துவக்குழு தகவல்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு என்று சந்தேகத்தின் அடிப்படையில் டெல்லியில் கண்காணிக்கப்பட்டு வந்த 406 பேருக்கும் கொரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் வெடித்த பின்னர் இந்த மக்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு 406 அழைத்து வரப்பட்டனர். அவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவா்களை தனியாக வைக்கப்பட்டனர்.

அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லை காவல் படை) சார்பில் டெல்லியில் 600 படுக்கைகளுடன் தனி மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டனர்.

பல கட்ட சோதனைகளுக்கு பிறகு அவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, படிப்படியாக அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: china, Corono virus, Itbp camp, ஐடிபிபி முகாம், கொரோனா வைரஸ், சீனா
-=-