மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 40,800 கனஅடியாக குறைப்பு

 

மேட்டூர்:

ர்நாடக மாநிலத்தில் மழை அளவு குறைந்துள்ளதால், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை கர்நாடக அரசு குறைத்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவையும் மாவட்ட நிர்வாகம் குறைத்து உள்ளது.

கடந்த சில நாட்களாக கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், தமிழக்ததிற்கு திறந்து விடும் தண்ணீரின் அளவை வெகுவாக கர்நாடக அரசு குறைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை காரணமாகவினாடிக்கு  1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக  அரசு தற்போது,  வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடுகிறது. மேலும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதை முற்றிலுமாக நிறுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக  மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு  60,800 கன அடி திறந்துவிடப்பட்ட நிலையில், தற்போது அது,  40,800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவை கர்நாடக அரசு குறைத்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது.