இன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

சென்னை:

மிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை விட, நோயிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் நோய் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணடைவோர் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துகொண்டே வருகிறது.

கொரோனா தொற்று பரிசோதனைக்காக தமிழகத்தில் இதுவரை 101 பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 53 அரசு சோதனை மையங்கள் மற்றும் 48 தனியார் மையங்களும் அடங்கும்.

இன்று மட்டும் 35,921 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 14,64,281 ஆக இருக்கின்றது.

இன்று புதிதாக 3,680 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,581 ல் இருந்து 1,30,261 அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 4,163 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை கொரோனா பாதித்த 82,324 பேர் மீண்டுள்ளனர்.

இன்று பாதிப்பை விட அதிகபேர் குணமடைந்திருப்பது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி