தமிழகத்தில் 4,174 பேருக்கு டெங்கு! அதிர்ச்சி தகவல்

டெல்லி,

நாடு முழுவதும் டெங்கு எனப்படும் காய்ச்சல் காரணமாக பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் 4174 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில்,  இந்த ஆண்டில் மட்டும் சுமார் 18,700க்கும் மேற்பட்டோர் டெங்கு  காய்ச்சலுருக்கு ஆளாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம்  நேற்று (ஜூலை 4 ம் தேதி)  வெளிட்ட தகவலி இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் ஜூலை 2 ஆம் தேதி வரை கேரளாவில் அதிகபட்சமாக 9,104 பேரும், அடுத்ததாக தமிழ்நாட்டில் 4,174 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும்,  ஜூலை 2 ம் தேதி வரை கேரளாவில் 9,104 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.

அடுத்ததாக தமிழ்நாட்டில் 4,174 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் அதிகபட்சமாக 1945 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 616 பேரும், அடுத்ததாக ஆந்திரப் பிரதேசத்தில் 606 பேரும்,மேற்கு வங்கத்தில் 469 பேரும், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

சிக்குன்குனியா டெல்லியில் 100க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஜூலை 2ஆம் தேதி வரை 10,952 பேர் சிக்குன்குனியாவால் பாதிப்படைந்துள்ளதாகவும், இதில் கர்நாடகாவில் அதிகபட்சமாக 4047 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நடைபெற்ற மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், கேரளாவிற்கு சுகாதார குழு சென்றுள்ளது என்றும்,   கேரளாவில் பருவமழை துவங்குவதால் அங்கு டெங்கு, மலேரியா மற்றும் பிற தொற்று நோய்களின் தாக்குதலை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

ஏற்கனவே கேரளாவிற்கு சென்றுள்ள  சுகாதார குழு கேரளாவில் நிலவும் நிலைமையை மதிப்பிட்ட பிறகு திரும்பி வந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக கேரளாவிலிருந்து எந்த வேண்டுகோளும் வரவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் சி.கே. மிஸ்ரா கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 174 cases of dengue in Tamil Nadu, 174 பேருக்கு டெங்கு! அதிர்ச்சி தகவல், 4, Shocking information, தமிழகத்தில் 4
-=-