Random image

பாகிஸ்தான் சிறையில் 418 இந்தியர்கள் அடைப்பு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து 2008-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஒப்பந்தப்படி ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ம் தேதிகளில் இரு நாட்டு சிறைகளில் உள்ள இரு நாட்டினரில் விபரங்களை வெளியிட வேண்டும்.

இந்த வகையில் 418 மீனவர்கள் உட்பட 471 கைதிகள் குறித்த பட்டியலை இந்திய தூதரிடம் பாகிஸ்தான் அரசு சமர்ப்பித்தது. விரைவில் இதேபோல் இந்தியாவும் பட்டியலை சமர்ப்பிக்கவுள்ளது.

You may have missed