42 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் பாரிவேந்தர்

nn

இந்திய ஜனநாயக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இக்கூட்டணியில் இந்திய ஜனநாயக் கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்நிலையில் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் 42 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் இன்று வெளியிட்டார். இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் கத்திரிக்கோல் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

கார்ட்டூன் கேலரி