சென்னையில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா… மாவட்ட வாரியாக விவரம்…

சென்னை:

மிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா  வைரசால் சூழப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாது. நேற்று  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,683 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இன்று 7 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அங்கு பாதிப்பு 141 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் நால்வருக்கும், திருவள்ளூர் மற்றும் ராமநாதபுரத்தில் தலா இருவருக்கும், சேலம், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அதுபோல சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நோய் குணமாகி வீடு திரும்பியோர் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.