லாரியில் கடத்தப்பட்ட 425 கிலோ கஞ்சா பறிமுதல்: மாதவரத்தில் போலீசார் அதிரடி

--

சென்னை:

சென்னை அருகே உள்ள மாதவரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின்போது லாரியில் கடத்தி வரப்பட்ட 425 கிலோ அளவிலான கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு அலுமினியம் ஹைட்ரேட்டை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னைக்கு வந்தது. அந்த லாரியை மாதவரம் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து லாரியையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது,  விருநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜா மற்றும் அப்துல் ரசாக் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.