டெல்லி:
லைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 427 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, மக்கள் இரவு 7 மணி முதல் வெளியே நடமாட தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்து உள்ளார்.

டெல்லியின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக தப்லிகி ஜமாத் மாநாடு திகழ்ந்தது.  அதன்மூலம் இந்தியா முழுவதும கொரோனா தொற்று பரவியது. தற்போது, தொற்று வீரியமுடன் பரவி வருகிறது. இதை தடுக்க ஏற்கனவே ஒருஐ40 நாட்களுக்கு மேலும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இருந்தாலும் தற்போதுதான் அதன் தாக்க்ம அதிகரித்து வருகிறது.
தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 427 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4549 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதைடுத்து, அங்கு மக்கள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வெளியே நடமாட தடை விதிக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.