சென்னை:

மிழகத்தில் இன்று ஒரே நாளில்  43 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது. இன்று 46 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இன்று 6,109 பேருக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டதில்,  43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவித்து உள்ளார். இதில் 18 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இன்று 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல, இன்று 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 457 ஆக உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக திகழ்ந்த புதுக்கோட்டையில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. திருச்சியில் 4 பேரும், விழுப்புரத்தில் 3 பேரும் இன்று பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் இதுவரை  சமூக தொற்று இல்லை என்று கூறிய அமைச்சர், ’ ரேபிட் கிட் சோதனை மூலம் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

உலகசுகாதார நிறுவனமே  பாராட்டும் வகையில் தமிழகஅரசு செயல்பட்டு வருவதாக கூறியவர்,  இது அரசியல் செய்வற்கான நேரம் இல்லை, எதிர்க்கட்சித் தலைவர் இதனை புரிந்துகொள்ள வேண்டும், மலிவான அரசியலை கைவிட வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.