43 பொதுத்துறை நிறுவனங்கள் தொடர் நஷ்டம்! மூடத் திட்டமா?

டில்லி,

நாட்டில் உள்ள  43 பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா, தொலை தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் உட்பட 43 நிறுவனங்கள் தொடர்ந்து 3 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கிய வருகிறது என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

அதிகளவிலான போட்டி, மோசமான மார்கெடிட்ங் மற்றும் திறமையற்ற நிர்வாகம்  ஊழியர்கள் பற்றாக்குறை போன்ற  காரண மாக 43 மத்திய அரசு நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக கூறி உள்ளது.

2015-16ன் படி 2013-16 நிதியாண்டுகளில் 43 பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து 3 வருடம் நட்டத்தை மட்டுமே சந்தித்துள்ள தாக பொதுத் துறை நிறுவனங்களின் மாநில அமைச்சரான பபுல் சுப்ரியோ நாடாளு மன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக  அளித்த பதிலில்  தெரிவித்துள்ளார்.

விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகியவற்றைத் தாண்டி, பிரிட்டிஷ் இந்தியா கார்பரேஷன், ஹிந்துஸ்தான் ஆன்டி பயோடிக்ஸ், எச்எம்டி வாட்சஸ் லிமிடெட், இந்தியன் டிரக் மற்றும் பார்மா ஆகிய நிறுவனங்களும் இந்த 43 நிறுவனங்களில் அடக்கம் என்றும் கூறி உள்ளார்.

இதில் ஒருசில நிறுவனங்களான ஹிந்துஸ்தான் பேப்பர் கார்பரேஷன் கீழ் இயங்கும் சாசர் பேப்பர் மில் மற்றும் நாகோன் பேப்பர் மில் ஆகியவற்றை நவீனமயமாக்கம் செய்யவும் மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், நஷ்டத்தில் இயங்கி வரும் மற்ற நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுமா அல்லது மூடப்பபடுமா என்பது குறித்து ஏதும் அறிவிக்க வில்லை.

ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கவோ அல்லது மூடி விடும்படியோ நிதிஆயோக் மத்திய அரசை வலியுறுத்தி வருவது  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறி யாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed