வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் தோன்றிய ஜனவரி மாதத்தில் சுமார், 4லட்சத்து 30ஆயிரம் மக்கள்  சீனாவிலிருந்து அமெரிக்கா பயணம் செய்துள்ள விவரம் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் குறித்து அமெரிக்கா பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முன்பு இந்த பயணங்கள் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி டிரம்பின் பயணக் கட்டுப்பாடுகளுக்கு முன்னர்  அமெரிக்காவின் 17 நகரங்களுக்கு 1,300 நேரடி விமானங்கள் இக்கப்பட்டு வந்தன.  அப்போதிருந்து, கிட்டத்தட்ட 40,000 அமெரிக்கர்கள்  உள்பட சீனர்கள் மற்றும் பல நாட்டைச் சேர்ந்தவர்கள்  இந்த பயணத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா குறித்து, புத்தாண்டு தினத்தன்றுதான், சீனா அரசு அதிகாரிகள்  சர்வதேச சுகாதார அமைப்பிடம் தகவ்ல தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகுதான் இந்த விவகாரம் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி பயண ஏற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அமெரிக்காவும் விமானப்பயணம் தொடர்பான சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்த சமயத்தில், சுமார் 2 மாதங் களில், கிட்டத்தட்ட 40,000 பேர் உட்பட, சீனாவிலிருந்து நேரடி விமானங்களில் குறைந்தது 4லட்சத்து 30ஆயிரம் பேர் அமெரிக்காவிற்கு வந்து இருப்பதாக தரவுகளின் அடிப்படையில் பிரபல அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், சிகாகோ, சியாட்டில், நெவார்க் மற்றும் டெட்ராய்ட் ஆகிய விமான நிலையங்கள் வாயிலாகவே பெரும்பாலோர் ஜனவரி மாதம் வந்தனர். கொரோனா வைரஸ் வெடிப்பின் மையமான வுஹானில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நேரடியாக அமெரிக்காவிற்கு வந்துள்ளதும் தெரிய வந்ததுள்ளது.

சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களுக்கு பிப்ரவரி 2 முதல் நடைமுறைக்கு வந்த கட்டுப்பாடுகள் விலக்கு அளிக்கும் விதிகளின் கீழ். மொத்தத்தில், 279 விமானங்கள்  சீனாவில் இருந்து  அமெரிக்காவிற்கு வந்துள்ளது-

இந்த காலக்கட்டத்தில் அமெரிக்க விமான நிலையங்களில் தீவிரமான ஸ்கிரீனிங் மற்றும் சோதனைகளை செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால்,  ஜனவரி 20 ஆம் தேதி, வாஷிங்டன் மாநிலத்தில், கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி முதல் கேஸ் உறுதிசெய்யப்பட்ட பின்னர்தான் , இந்த வைரஸ்  பல வாரங்களாக கண்டறியப்படாமல் பரவுவதாகவும், அது தொடர்ந்து ஸ்பிரெட் ஆகி  வருவதாகவும் பல தொற்று நோய் நிபுணர்கள் சந்தேகித்தனர்.

உண்மையில், கொரோனா வைரஸ் முதன்முதலில் அமெரிக்காவில் எப்போது வந்தது என்பது யாருக்கும் தெரியாது.

ஜனவரி முதல் பாதியில், சீன அதிகாரிகள் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த  தீவிரத்தை குறைத்து மதிப்பிடும்போது, ​​சீனாவிலிருந்து வந்தவொரு  பயணிகளும் வைரஸின் பாதிப்புக்கு ஆளாகவில்லை.

பின்னர் ஜனவரி நடுப்பகுதியில் வுஹானில் இருந்து வந்த  பல பயணிகளுக்கு மட்டுமே  லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க்கில் உள்ள விமான நிலையங்களில் சுகாதார பரிசோதனைநடத்தப்பட்டது.

அந்த நேரத்தில், வுஹானில் இருந்து சுமார் 4,000 பேர் ஏற்கனவே அமெரிக்காவிற்குள் நுழைந்ததாக சீனாவை தளமாகக் கொண்ட விமான தரவு நிறுவனமான வரிஃப்லைட் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஹோகன் கிட்லி, டிரம்ப்பின் பயணக் கட்டுப்பாடுகள் “தைரியமான தீர்க்கமான நடவடிக்கை” என்று விவரித்தார், இது மருத்துவ வல்லுநர்கள் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது என்று நிரூபிக்கும். ” இந்த கொள்கை நடைமுறைக்கு வந்தது, உலக சுகாதார சமூகம் இன்னும் “பரவுதல் அல்லது அறிகுறியற்ற பரவலை அறியவில்லை” என்று அவர் கூறினார்.

ஆனால்,  கொரோனா பரவிய அந்த நேரத்தில், உலக சுகாதார அமைப்பு பயணக் கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கவில்லை, சீன அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.  மற்றும் சில விஞ்ஞானிகள் பயணத்தை குறைப்பது ஏதேனும் நல்லது செய்யுமா என்று கேள்வி எழுப்பினர்.

எப்படி இருந்தாலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விஷயத்தில், அசால்டாக இருந்து, அமெரிக்கா கோட்டை விட்டது நிரூபணமாகி உள்ளது.

Source: New york Times