தமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1லட்சத்தை நெருங்கியது…

சென்னை:

மிழகத்தில் இன்று 4,343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி உள்ளது.

இன்று (2/7/20320) மாலை 6 மணி நிலவரப்படி,  புதிதாக  4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை  98,392 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 2,027 பேர் பாதிக்கப்பட்டனர்.  தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  62,598 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 3,095 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  56,021 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57% ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 73பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி