ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #44YrsOfUnmatchableRAJINISM முதலிடம்….!

ரஜினிகாந்த் சினிமாத்துறைக்கு வந்து இன்றுடன் 44 வருடங்களான நிலையில் அதை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் #44YrsOfUnmatchableRAJINISM என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

1975-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த்.

1978-ம் ஆண்டு வெளியான பைரவி படத்தில் மூலம் தான் ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் வழங்கப்பட்டது.

ரஜினிகாந்த் ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டு முறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.

ரஜினியின் சினிமா பயணங்களையும் ரசிகர்கள் பதிவிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.