சென்னை:

பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்பு குறைந்துள்ள நிலையில், ஆர்ட்ஸ் எனப்படும் கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக புதிய புதிய கலை, அறிவியல் படிப்புகளைத் தொடங்க அனுமதி கோரி சென்னைப் பல்கலைக் கழகத்தில் 45 கல்லூரிகள் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ள நிலையில், அந்த கல்லூரி கள் கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்ற முயற்சிகள் செய்து வருகின்றனர்.

தங்களது கல்லூரிகளில்  பி.ஏ., பி.காம், பி.பி.ஏ., பி.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள் நடத்த அனுமதி கோரி சென்னை பல்கலைக்கழகத்தில் விணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் சில கல்லூரிகள், ஃபேஷன் டெக்னாலஜி, வொகேஷனல் பேங்கிங், ஃபைனான்ஷியல் சர்வீசஸ், இன்சூரன்ஸ், டூரிசம் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் இளங்கலைப் படிப்புகளுக்கும் அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவ மாணவிகளின் தேவைக்கேற்ப  விரைவில் அந்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.