புதுடெல்லி: இந்திய தலைநகரில் 45 இந்தோ -திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல், மே மாதம் 17ம் தேதி வரை, நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஊரடங்கை அமல்படுத்தும் வகையில், டில்லியில் இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த சில வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் 43 இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் மேலும் 2 வீரர்கள் என மொத்தம் 45 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனையடுத்து, உடனடியாக அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.