45 கிராமங்களில் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து! தமிழகஅரசு அதிரடி

சென்னை:

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகஅறிவித்துள்ள தமிழக அரசு, 45 கிராமங்களில் தொடங்கப்படு வதாக கடந்த 2017ம் ஆண்டு வெளியிட்ட  அறிவிக்கப்பட் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணையை ரத்து செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருகள் முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals and Petrochemicals Investment Region -PCPIR) அமைப்பதற்கு 2017ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அது தற்போது எடப்பாடி அரசால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

டெல்டா விவசாயப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டங்களை இனிமேல் செயல்படுத்த முடியாதவாறு, காவிரி பாயும் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழகஅரசு, அதற்கான மசோதாவையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், திமுக, மதிமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் இது ஏமாற்றும் செயல் என குற்றம்சாட்டின.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “பெட்ரோலிய மண்டல அறிவிப்பாணை இரத்து செய்யப்படும் என்று முதல்வர் அறிவிக்காதது ஏன்? அப்படியானால், கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் சேர்க்கப்படவில்லையா?” என்று கேள்வி எழுப்பியி, தமிழக அரசின் புதிய மசோதாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில்,  கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருகள் முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals and Petrochemicals Investment Region -PCPIR) அமைப்பதற்கு 2017ஆம் ஆண்டு ஜூலை 19ந்தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து தமிழக அரசு இன்று (பிப்ரவரி 22) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அந்த மாவட்டங்களில்  45 கிராமங்களில் 57500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

எடப்பாடி அரசின் இந்த அதிரடி நடவடிக்கை விவசாயிகளுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.