இன்று மேலும் 4549 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,56,369 ஆக உயர்வு…

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக பரவி வருகிறது. கடந்த மாதம் வரை சென்னையில் அதிதீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 4549  பேருக்கு தொற்று  உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,56,369 ஆக உயர்நதுள்ளது.

இன்று மட்டும்  69 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 2236 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்றில் இருந்து இன்று 5106  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை  1,07,416 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் 1157 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும்,  44,186 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.