வங்க தேசத்தில் நிலச்சரிவு: மண்ணில் புதையுண்டு 46 பேர் பலி

டாக்கா:

வங்காளதேசத்தில் பெய்த கனமழை காரணமாக நில சரிவு ஏற்பட்டு 46 பேர் பலியானானார்கள்.

வங்காளதேசத்தில் ரங்கமாதி, பந்தர்பான் ஆகிய மாவட்டங்களில்  நேற்று கனமழை பெய்தது. இதநால்  பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய 46 பேர்  பலியானதாக  தகவல் வெளியாகி உள்ளது.  ரங்கமாதியில் 10 பேரும், பந்தர்பான் மற்றும் சிட்டகாங்கில் 15 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.