ஏழு விநாடிகளில் 47 கோடி ரூபாய் கொள்ளை!

ஹாங்காங்:
ஹாங்காங் நகைக்கடை ஒன்றில் சுமார் 47 கோடி ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம் ஒன்று, ஏழே விநாடிகளில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

ஹாங்காங்கின் சிம் ஷா சூய் என்ற இடத்தில் பிரபலமான நகைக்கடையில் இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது. முகமூடி அணிந்த நபர் ஒருவர் அக் கடையின் கண்ணாடியை கோடாரியால் உடைத்து வைர மோதிரம் ஒன்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அதன் மதிப்பு ஹாங்காங் டொலரில் 5 மில்லியன் டாலர் (47 கோடி ரூபாய்)!

கடை வாசலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் அந்த கொள்ளைக் காட்சி பதிவாகியிருக்கிறது. மொத்தம் ஏழே விநாடிகளில் இந்த கொள்ளையை நிகழ்த்திவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் அந்த பலே கொள்ளையர்!

Leave a Reply

Your email address will not be published.