மத்தியதரைக் கடலில் மூழ்கி இறந்த 47 குடியேறிகள்

துனிசியா

துனிசியா மற்றும் துருக்கி நாட்டை சேர்ந்த 180 குடியேறிகள் மத்தியதரைக் கடலைக் கடக்கும் போது விபத்துக்குள்ளாகி 47 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மிகவும் வறுமை அடைந்துள்ள ஆப்ரிக்க நாடுகளில் இருந்தும் போரால் பாதிக்கப்பட்ட ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பாவுக்கு குடியேறி வருகின்றனர்.   இவர்கள் சட்டவிரோதமாக மத்தியதரைக் கடல் வழியாக படகுகளில் செல்லும் போது விபத்துக்கள் ஏற்பட்டு பலர் மரணம் அடைகின்றனர்.

சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் இவ்வாறு ஐரோப்பிய நாடுகளில் குடியேறி உள்ளனர்.  இவர்கள் கடல் வழியாக செல்லும் போது லிபியா நாட்டின் வழியாக செல்லும் போது கண்காணிப்பு அதிகம் உள்ளது.   இதனால் இவர்கள் துனிசியா கடல் பாதை வழியாக இத்தாலி நாட்டுக்குள் தஞ்சம் புகுந்து விடுகின்றனர்.   சென்ற ஆண்டு மட்டும் இவ்வாறு சுமார் 15 லட்சம் பேர் சென்றுள்ளனர்.

நேற்று ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 பேர் சட்டவிரோதமாக ஒரு படகில்சென்றுள்ளனர்.   அந்தப் படகு துனிசியா கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகியது.    இதில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.  இதுவரை 47 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.  அத்துடன் 67 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.   மீதம் உள்ளோரை தேடும் பணி நடந்து வருகிறது.

கார்ட்டூன் கேலரி