கழிப்பிட வசதியுடன் கூடிய பேருந்துகள் உள்பட 471 புதிய பேருந்துகள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை:

மிழக தேவைகளுக்காக 471 புதிய பேருந்துகள்ளை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகளின் மதிப்பு ரூ.127 கோடி என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகள் தனியார் பேருந்துகளுக்கு இணையாக  இருக்கும் வகையில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சட்டசபை கூட்டத் தொடரின்போது அறிவித்திருந்தனர். அதன்படி புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  ரூ.127 கோடி மதிப்பிலான, கழிப்பிட வசதியுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகள் உள்பட  471 புதிய பேருந்துகள் தமிழக போக்குவரத்து துறைக்காக வாங்கப்பட்டுள்ளது.  இந்த பேருந்து சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து புதிய குளிர்சாதன பேருந்தில் பயணம் செய்த முதல்வர் மற்றும் துணைமுதல்வர் அதில் செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தனர். இந்த பேருந்தில், படுக்கை வசதியுடன்,கழிப்பிட வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ். வசதி, செல்போன் செயலி மூலம் பஸ் வரும் நேரத்தை அறியும் வசதி, 2 அவசர கால வழிகள், சீட் சாய்வை 105 டிகிரியில் இருந்து 115 ஆக உயர்த்தியிருப்பது  போன்ற பல வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதுபோல பஸ்சை இயக்கும் ஓட்னுநர், குடித்துவிட்டு பஸ்சை ஓட்ட முயற்சித்தால், அதை கண்டறியும் கருவி டிரைவர் இருக்கை அருகே பொருத்தப்பட்டுள்ளது.