ஒரே நாளில் 47,703 பேர்: இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு 15லட்சத்தை நெருங்கியது….

டெல்லி:

ந்தியாவில் நேற்று ஒரே நாளில் 47,703 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியான நிலையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ரூ. 15லட்சத்தை நெருங்கி உள்ளது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி (28/07/2020) இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 14, 83,156, ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 33,445 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,52,743 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,96,988 ஆக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 47,703 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 654 பேர் கோரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந் துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,771 லிருந்து 33,425 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,17,568 லிருந்து 9,52,743 ஆக உயர்ந்துள்ளது.