சென்னையில் 47876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன

சென்னை

சென்னையில் இதுவரை 47876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவுக்கு மருந்துகள் கண்டறியப்படாததால் ஊரடங்கு, சோதனை, தனிமைப்படுத்தல் முக்கியத்துவம் வகிக்கிறது.

இவ்வாறு கொரோனா பாதிப்பு உள்ளோரைக் கண்டறியப் பல இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதுவரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 47,876 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

சுமார் 25,01,908 லட்சம் பேர் பங்கு பெற்றுள்ளனர்.

இதில் 1,46,947 பேருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது.

இதில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை பகுதியில் 4648 முகாம்கள் நடந்துள்ளன.

இங்கு 2,69,108 பேர் கல்ந்துக் கொண்டுள்ளனர்.

மணலியில் மிகக் குறைவாக 787 முகாம்கள் நடந்துள்ளன.

இங்கு 50187 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.