24 வயது இளைஞருடன் ரொமான்ஸ் செய்யும் 48 வயது தபு….!

1996 ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் தபு.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருபவர் இவர் .

சிறந்த நடிகைக்காக தேசிய விருது, மத்திய அரசின் பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார் தபு.சினிமாவில் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவரும் கூட.

இந்த நிலையில், 48 வயதாகும் தபு 24 வயது இளைஞருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஆனால் இது உண்மையில் ஒரு வெப் சீரிஸின் காட்சியாம். மீரா நாயர் இயக்கத்தில் ‘ஏ சூட்டபிள் பாய்’ (A Suitable Boy) என்ற வெப் சீரிஸில் தபு நடிக்கிறார். இதில் தபுக்கு ஜோடியாக இஷான் கத்தர் என்ற இளைஞர் நடிக்கிறார்.

தற்போது இந்த வெப் சீரிஸின் புகைப்படம் வெளியாக விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதோடு, வைரலாக பரவியும் வருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-