48 ஆண்டுகளுக்கு முன் நடந்த அறப்போரில் உயிர் துறந்த விவசாயிகளின் நினைவு வீரக்கல்…!

நெட்டிசன்:

Esan D Ezhil Vizhiyan முகநூல் பதிவு

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் 5-7-1972 அன்று மின்சாரகட்டண உயர்வை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது…!

மின்சார கட்டண உயர்வு எவ்வளவு தெரியுமா? வெறும் ஒரு பைசா தான்…! ஒரு பைசா அவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்த அந்த காலகட்டத்தில் நடந்த அந்த விவசாயிகள் அறப்போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 9 விவசாயகள் பலியானர்கள்….!

அவர்கள் தியாகத்தை போற்றும் வகையில் அவர்கள் பெயர்கள் பொறித்த நினைவு வீரக்கல் ஒன்று 15-7-1974 அன்று பெத்தநாயக்கன்பாளையம் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டது…!

பின்பு ஊர் விரிவாக்க பணிகள் காரணமாக தற்போது அந்த நினைவு வீரக்கல் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்கா ஆபீஸ் அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது…!

9 விவசாயிகள் உயிர்நீத்து கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் ஆகி விட்டது…! இன்றும் விவசாயிகள் வாழ்வு ஒரு போராட்டமாகவே இருப்பது வேதனைக்குரியது…!