இன்று 4,807 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,65,714 ஆக உயர்வு…

சென்னை:

மிழகத்தில் இன்று  புதிதாக 4,807 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,65,714 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. இன்று அதிகபட்சமாக 4807 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த உச்சபட்ச பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் 1219 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இன்று ஒரே நாளில் 3049 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட் டோர் மொத்த எண்ணிக்கை 1,13,856 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2403 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 24பேர் தனியார் மருத்துவமனையிலும், 64 பேர் அரசு மருத்துவமனை யிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,403ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று  47,179  பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,79,499 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,907 பேர் ஆண்கள், 1,900 பேர் பெண்கள்.

தமிழகத்தில் 111 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.