ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது, அந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட  அமெரிக்க கடற்படை (சீல்) அதிகாரி ஒருவர், தனது அனுபவத்தை எழுதி புத்தகமாக வெளியிட்டார். இப்போது அமெரிக்க பாதுகாப்புத்துறையின் எதிர்ப்பால் புத்தகத்தின் மூலம் கிடைத்த  49 கோடி ரூபாயை பாதுகாப்புத்துறைக்கே அளிக்க ஒப்புக்கொண்டுவிட்டார்.
பாகிஸ்தானில் மறைந்திருந்த பயங்கரவாதி பின்லேடனை தேடுதல் வேட்டை நடத்தி கொன்றது அமெரிக்க படை. இந்த குழுவில் மாட் பிஸ்ஸோனெட் என்ற கடற்படை வீரரும் இருந்தார். இவர், தனது அனுபவத்தை மார்க் ஓவென்  என்ற புனைப்பெயரில், “’நோ ஈஸி டே’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி, 2012ம் ஆண்டில் வெளியிட்டார்.
r
புத்தகத்தை வெளியிட,  அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகனிடமிருந்து முறையான அனுமதி பெறவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை  குற்றம்சாட்டியது. இது குறித்து வழக்கும் தொடர்ந்தது.

மாட் பிஸ்ஸோனெட்
மாட் பிஸ்ஸோனெட்

இதையடுத்து, மாட் பிஸ்ஸோனெட், தான் எழுதிய என்ற புத்தகத்தின் மூலம் கிடைத்த ராயல்டி, திரைப்பட உரிமை  உட்பட அனைத்து வருமானத்தையும் அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு அளிப்பதாக தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். இதன் மதிப்பு 7 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 49 கோடி ரூபாய்.
புத்தகம்
புத்தகம்

இதையடுத்து  அவர் மீதான வழக்குகளை அமெரிக்க பாதுகாப்புத்துறை விலக்கிக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.
புத்தகத்தை எழுதிய மாட் பிஸ்ஸோனெட்  இப்போது, “பின்லேடன் இருக்கும்போதுதான் பலரையும் கொன்றார். உலகை கெடுத்தார். இறந்தும் என் வாழ்க்கையில் விளையாடிவிட்டாரே” என்று புலம்புகிறாராம்.
உரிய அனுமதி பெறாமல்  புத்தகம் வெளியிட்டால்,  செத்துப்போன பின்லேடன் என்ன செய்வார், பாவம்!