புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

புதுச்சேரி:

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றால் மக்கள் கவலையடைந்து உள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  இன்று மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை  565 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 619 பேர் குணமடைந் துள்ளனர். இதுவரை  16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்,  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்துள்ள வீடியோ பதிவில், காரைக்காலில் ஒரு கைரேகை ஜோதிடம் பார்ப்பவரின் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்ட அவரின் அறியாமையால் மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று பரவியதாகவும் கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி