இன்று 49 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1372 ஆக உயர்வு

சென்னை:
மிழகத்தில்  இன்று எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், புதியதாக 49 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்து உள்ளது.
அதேவேளையில்,  கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 283ல் இருந்து 365 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவடைந்து வருவதாகவும்,  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 26 சதவிகிதம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர், இறப்பு விகிதம் 1%  மட்டுமே என்று தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும், இன்று  5363 பேருக்கு சோதனை  செய்யப்பட்டது என்றும் தெரிவித்து உள்ளார்.
இன்று தமிழகம் கொரோனா பலி இல்லாத மாநிலமாக மாறி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், தமிழகம் விரைவில் ஊரடங்கில் இருந்து விடுதலைப்பெற்றுவிடும்.

You may have missed