சென்னை:

மிழகத்தில் உயர்கல்வி பயில்பவர்கள் 49% பேர் என்று தமிழக  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். வளரும் நாடுகளிலேயே தமிழகத்தில்தான் அதிக பேர் என்றும் கூறி உள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.  12வது பட்டமளிப்பு  விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தின் வில் பல்கலைக் கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித், பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புயாற்றினார்.

அப்போது பேசிய தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன்,  இந்திய அளவில் தொலைநிலைக் கல்வி முறையை திறம்படச் செயல்படுத்தி வரும் ஆறு மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவித்தவர், உயர் கல்வி பயில்பர்கள், நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில்தான் 49 சதவிகிதம் பேர் கல்வி பயில்கிறார்கள் என்றும் கூறினார்.