டெல்லி:
ந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை  இல்லாதவகையில் அதிகபட்சமாக  கடந்த 24 மணி நேரத்தில் 49 ஆயிரத்து 310 பேருக்கு உறுதியாகி உள்ளது.  மேலும்  740 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது.
இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 12,87 ,945 ஆக அதிகரித்தள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,310 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 740 பேர் பலியாக உள்ளதாகவும் கூறி உள்ளது. இதன் மூலம் உயிரிழப்பு 30, 601 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும்  ரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்து, 8 லட்சத்து 17 ஆயிரத்து 208 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 63.45 ஆக உயர்ந்துள்ளது.
நோய் தொற்று பரவலில் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு தொற்று  உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,94,253 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பரவலில் தமிழகம் 2வது இடத்தில்உள்ளது. இங்கு  கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 974 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,793 ஆகவும் அதிகரித்துள்ளது.

3வது இடத்தில் நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,27,364 பேராக அதிகரித்துள்ளது. 1,09,065 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 52,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,978 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 33,220 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 25,474 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 58,104 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 51,757 பேரும், ஆந்திராவில் 72,711 பேரும், பஞ்சாப்பில் 11,739பேரும், தெலங்கானாவில் 50,826 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 16,429 பேர், கர்நாடகாவில் 80,863 பேர், அரியாணாவில் 28,975 பேர், பிஹாரில் 31,980 பேர், கேரளாவில் 16,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,594 பேர் குணமடைந்துள்ளனர். ஒடிசாவில் 21,099 பேர், சண்டிகரில் 800 பேர், ஜார்க்கண்டில் 6,975 பேர், திரிபுராவில் 3,449 பேர், அசாமில் 28,791 பேர், உத்தரகாண்டில் 5,300 பேர், சத்தீஸ்கரில் 6,254 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,834 பேர், லடாக்கில் 1,210 பேர், நாகாலாந்தில் 1,174 பேர், மேகாலயாவில் 534 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹவேலியில் 770 பேர், புதுச்சேரியில் 2,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,400 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 332 பேர், சிக்கிமில் 460 பேர், மணிப்பூரில் 2,115 பேர், கோவாவில் 4,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்”.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.