தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா: 78 பேர் பலி

--

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  சில வாரங்களாக சென்னையில்  கொரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந் நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலில் இது குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை1,70, 693 ஆக உள்ளது. கொரோனாவால் இன்று ஒரு நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,481  ஆக உள்ளது.

இன்று 4,059 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை  1,17,915பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  85,598 ஆக உள்ளது.