4தொகுதி இடைத்தேர்தல்: திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:

மிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம்  கடந்த 9ந்தேதி அறிவித்திருந்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை  திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நியமித்து உள்ளார்.

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து,, தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை திமுக தலைமை அறிவித்தது.

அதன்படி, ஓட்டாபிடாரம் – எம்.சி.சண்முகையா,  சூலூர் – பொங்கலூர் பழனிசாமி, திருப்பரங்குன்றம் – டாக்டர் சரவணன், அரவக்குறிச்சி – செந்தில்பாலாஜி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவித்தது.

இந்த நிலையில், 4 தொகுதிகளுக்கான  பொறுப்பாளர்களை திமுக தலைமை அறிவித்து உள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளராக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர். இ.பெரியசாமி,  மணிமாறன் ஆகியோர்  நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர்  கே.என்.நேரு தலைமையில் கனிமொழி, அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதிக்கு திமுக முன்னாள் அமைச்சர்,  பொன்முடி, செந்தில்பாலாஜி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

சூலூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர்  எ.வ.வேலு, தென்றல் செல்வராஜ், ஆ.ராசா உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமனம்.

தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்து உள்ளார்.

4 தொகுதிகளிலும்,  வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ந் தேதி தொடக்க உள்ளத.

வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்ரல் 29ந் தேதி

வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை ஏப்ரல் 30ந் தேதி

தேர்தல் வாக்குப்பதிவு: மே 19ந்தேதி

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி மே 23ந் தேதி.