புதுடெல்லி: இந்த 2021ம் ஆண்டிற்கான 4ஜி தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலம், மார்ச் 2ம் தேதி வாக்கில், ரூ.77814.80 கோடிக்கு நிறைவடைந்துள்ளது.

இந்த ஏலத்தில், முக‍ேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம்தான் அதிகளவு தொகைக்கு அலைக்கற்றையை வாங்கியுள்ளது.

ஏலத்தின் இரண்டாவது நாளில் ரூ.668.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. முதல் நாளில், ரூ.77146 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில், அம்பானியின் ஜியோ நிறுவனம் ரூ.57122.65 கோடிக்கு, அதாவது 488.35 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையை ஏலம் எடுத்தது.

இதற்கடுத்து, பார்தி ஏர்டெல் நிறுவனம், ரூ.18698.75 கோடி மதிப்பிற்கு 355.45 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையை ஏலம் எடுத்தது. வோடபோன் ஐடியா நிறுவனம், ரூ.1993.40 கோடி மதிப்பிற்கு 11.80 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையை ஏலம் எடுத்தது.

மொத்த அலைக்கற்றையை ஏலம் விடுவதன் மூலம், மத்திய தொலைத்தொடர்பு துறை, ரூ.3.92 லட்சம் கோடி அளவிற்கு வருமானம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.