பாலிவுட்டின் கனவு கன்னியாக இன்று வரை வலம் வரும் நடிகை கஜோல்.

ஹிந்தி திரைப்படங்களில் காஜல் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இவர்கள் பாலிவுட் சினிமாவின் சிறந்த ஜோடி என பல ஆண்டுகளாக புகழப்பட்டு வருகின்றனர்.

தமிழில் 1997 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்த காஜல், நடித்த முதல் படத்திலேயே தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

ஆகஸ்ட் 5ஆம் தேதியான இன்று தனது 46வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி ஒட்டுமொத்த திரையுலகமும் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில், இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பொழிந்த வண்ணம் உள்ளனர்.