Random image

திருப்பதி பிரமோற்சவம் 4வது நாள்: கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாள் விழா நடைபெறுகிறது. இன்றைய விழாவில்  மலையப்ப சுவாமி  கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

மலையப்ப சுவாமி கற்பக விருட்சவாகனத்தில் மலையப்பசுவாமி பூதேவி, சீதேவி உடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் மலையப்ப சாமியை தரிசித்து வருகின்றனர்.

.இன்று இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. 3-ஆம் நாளான நேற்று மலையப்ப சுவாமி, சிம்ம வாகனத்தில் நரசிம்மர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.

இன்று 4வது நாளாக கற்பக விருட்சத்தில் சீதேவி பூதேவியுடன் மலையப்பசாமி தோன்றி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

மாட வீதியின் இரு புறத்திலும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடி சென்றனர்.

பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி, கோலாட்டம், பரத நாட்டியம் ஆடிக்கொண்டு மாட வீதிகளில் வலம் வந்தனர். மாட வீதிகளில் நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.

நாளை, 17-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடக்கிறது.

18-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 5 மணியளவில் தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா,

19-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா,

20-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 11 மணிவரை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா,

21-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி), இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கத்தோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.