4வது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

india

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3டி20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. முதலில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மிக சிறப்பான வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நான்காவது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.

இன்றைய போட்டியில் பங்கேற்கும் இந்திய அனியில் இரு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரிஷப் பண்ட்க்கு பதிலாக ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், சுழல்பந்து வீச்சாளர் சஹாலுக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.