பாக்தாத் அமெரிக்க தூதரகம் மீது 4வது முறையாக ராக்கெட் தாக்குதல் – விடைதெரியா வினாக்கள்!

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்படுவது இது 4வது முறை.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், இதன் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஈரான் நாட்டின் ராணுவ தளபதி சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து, பாக்தாத் அமெரிக்க தூதரகம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதில் எத்தனைபேர் பலியானார்கள் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை போன்ற விபரங்களை அமெரிக்கா இதுவரை வெளியிடவில்லை.

மேலும், இதற்கான பதில் தாக்குதல்களும் அமெரிக்கா சார்பாக நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற தாக்குதலிலும் என்ன சேத விபரங்கள் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்ந்து நான்காவது முறையாக அமெரிக்க தூதரகம் அருகே நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா தொடர்ந்து ஈரானை குற்றம் சாட்டினாலும், அந்நாட்டின் தரப்பில் பதில் தாக்குதல் தொடுக்கப்படாதது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.

அதேசமயம், இந்த ராக்கெட் தாக்குதல்களால் இப்பிராந்தியத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-