சிட்னியில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியில் புஜரா சதம் கடந்த நிலையில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்துள்ளது.

virajpg

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொட்ரை வெல்லாத இந்திய அணி, அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. அதன்பின்னர் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வென்றது.

இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதுக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி வெற்றிப்பெற்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் இரு அணிகளும் பங்கேற்கும் 4வது டெஸ்ட் போட்டி சிட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் முதலில் பேட்டிங்க் செய்தனர். 2வது ஓவரில் ஹேசன்வுட் வீசிய பந்தை எதிர்கொண்ட ராகுல் 9 ரன்களிலேயே அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து அகர்வாலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி உணவு இடைவேளை வரை 69 ரன்களை மட்டுமே எடுத்தனர்.

சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 96 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி, புஜாராவுடன் இணை சேர்ந்தார். களமிறங்கியதில் இருந்து சில பவுண்ட்ரிகளை வீசியா கோலி 23 ரன்களிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து ரஹானே களமிறங்கி, புஜாராவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். இதனால் 63-வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. ஸ்டார்க் வீசிய 71-வது ஓவரில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து 18 ரன்களில் ரஹானே வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 48 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த விஹாரி, புஜாராவுடன் சேர்ந்தார்.

சதத்தை நோக்கி முன்னேறிய புஜாரா, இந்த டெஸ்ட் தொடரில் தனது 3-வது சதத்தை 199 பந்துகளில் நிறைவு செய்தார். அரை சதம் அடிக்க 134 பந்துகள் எடுத்துக்கொண்ட புஜாரா அடுத்த 50 ரன்களை விரைவாக 66 பந்துகளில் சேர்த்தார்.

இந்நிலையில் 4டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 303 ரன்களை குவித்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும், விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.