Random image

சிட்னி டெஸ்ட்: ரன் எடுக்க திணறும் ஆஸ்திரேலியா – முதல் இன்னிங்சில் 236/6…

இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

australia

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் புராஜா, ரிஷப் பண்ட், அகர்வால் மற்றும் ஜரேஜாவின் அதிரடி ஆட்டத்தினால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 622 ரன்களை குவித்தது. இதையடுத்து இந்திய அணி போட்டியை டிக்ளேர் செய்தது. இதில் புஜாரா 193, ரிஷப் 150, மயங்க் அகர்வால் 77, ஜடேஜா 81 ரன்கள் எடுத்து அசத்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணியின் ஹாரிஸ் நிதானமாக விளையாடி 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கவாஜா 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இவர்களை தொடந்து வந்த மார்த் 8 ரன்களிலும், லபூஸ்சாக்னே 38ரன்களிலும், ஹெட் 20 ரன்களிலும் விக்கெட்டை பறிக்கொடுத்தனர். தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 198 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின்னர் ஆட்டம் தொடங்கியதும் 5 ரன்களிலேயே பெய்னி வெளியேறினார். இறுதியாக ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்ததால் இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஹேண்ட்ஸ்காம்ப் 28 ரன்களுடனும், கம்மின்ஸ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் இந்தியாவை விட 386 ரன்கள் பின்தங்கியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.