லிச்சி, லாங்கன் மற்றும் வாழை பண்ணைகளுக்கு பெயர் பெற்ற சீனாவின் தென்மேற்கு குவாங்டாங் மாகாணத்தில் உள்ள காவோசோ என்ற விவசாய கிராமம் 5 ஜி எனப்படும் 5ம் தலைமுறை இணையத்தை பயன்படுத்தி செய்த முதல் காணொலி வழி அறுவை சிகிச்சை தற்போது சீனா முழுதும் 5ஜி தலைமுறையை கொண்டு போக காரணமாகியுள்ளது

கடந்த ஏப்ரல் 2019 ல் காவோசோவில் உள்ள மக்கள் மருத்துவமனையில்   41-வயது பெண் நோயாளிக்கு பிறவியில் வரும் இருதய பாதிப்பு நோய்க்கு தொலை மருத்துவ தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை செய்தனர். இந்த தொலை மருத்துவ தொழில்நுட்பத்திற்கு அடிப்படையாக இருந்தது 5ம் தலைமுறை இணையம் எனப்படும் 5 ஜி


இந்த அறுவை சிகிச்சையை காவோசோ கிராமத்தில் உள்ள மக்கள் மருத்துவமனை யில் இருந்து 400 கி.மீட்டர் தூரத்தில் உள்ள குவாங்டோங் மாகாண மக்கள் மருத்துவமனையில் இருந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள், தங்கள் முன் உள்ள உயர்திறன் கொண்ட கணினித்திரையில், நோயாளியின் இதயம் முப்பரிமாண முறையில் ஒரு திரையிலும் அருகில் உள்ள மருத்துவர்கள் ஒரு திரையிலும் வைத்து வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

இந்த அறுவை சிகிச்சையில்  நோயாளியின்   ultrasonography யின் 600 எம்பி அளவுள்ள கோப்பு ஒரே விநாடியில்   குவாங்டோங் மருத்துவமனைக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இப்போதுள்ள 4ம் தலைமுறை இணையத்தில் இந்த கோப்பை அனுப்ப குறைந்தது 20 நிமிடமாவது ஆகியிருக்கும்
சீனா முழுவதும், நெருக்கடியான போக்குவரத்து உள்ள சூழ்நிலையில்  நோயாளிகளை வேறு இடத்திற்கு நகர்த்தக்கூடிய வாய்ப்பு மிகக்குறைவு, இதற்காகவே  சீனாவில்  5G கூட்டிணைவு, தொலைதூரத்தில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள தரமான சுகாதாரப் பாதுகாப்பு சேவைகள், தொலை நிலை யில் இருந்தே ோய்களை கண்டறிதல், தொலைதூர அறுவை சிகிச்சைகள் மற்றும் ஸ்மார்ட் மருத்துவமனைகளில் சீனா முழுதும் கவனம் செலுத்திவருகிறது. இதற்காக அவர்களின் சீனா மொபைல் என்ற நிறுவனமும் வாவே நிறுவனத்தின் 5ஜி உபகரணங்களும் பயனுள்ளதாக இருக்கின்றன என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்

இதுமட்டுமல்ல சீனாவில் மார்ச் மாதம்  ரோபாட் மூலம் தொலை மருத்துவ தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது Parkinson’s எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மூளை துண்டுதலை செய்யும் கருவியும் பொருத்தப்பட்டது, இந்த அறுவை சிகிச்சை உலகில் முதல்   remote deep brain stimulation (DBS) அறுவை சிகிச்சையாக அமைந்தது
சன்யா எனும் நகரம் ஹைநான் என்ற மாநிலத்தில் அமைந்துள்ளது, அங்கிருந்து 3000 கிமீ தொலைவில் உள்ள  பீஜிங் ல் உள்ள மருத்துவமனையில் உள்ள இயந்திர கருவியில்  இருந்து  நியூரோசிமியூலேட்டர் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
இந்த அறுவை சிகிச்சைக்கும் அடிப்படை கட்டமைப்பு வாவே நிறுவனத்தின் 5 ஜி எனப்படும் 5ம் தலைமுறை இணையம்தான்

கடந்த ஜூன் 6ம் தேதி  China Mobile, China Unicom, China Telecom and the China Broadcasting Network. ஆகிய நிறுவனங்களுக்கு நாடு முழுதும்  5 ம் தலைமுறை இணையச் சேவை கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது , இதன் மூலம் எல்லா தொழில்நுட்பங்களும் பெரும் குறிப்பாக மருத்துவத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெறும் என்றுசீனா எதிர்பார்க்கிறது

-செல்வமுரளி