டி.எம்.கிருஷ்ணாவுடன் உங்கள் அனுபவம எப்படி இருந்தது?
அவரிடம் வித்தியாசமான பாடங்களை கற்றுக் கொண்டேன். 19 ஆண்டுகள் பிரஞ்ச் பற்றி தான் எனக்கு தெரியும். இங்குள்ள பாரம்பரிய இசை குறித்து எனக்கு எதுமே தெரியாமல் இருந்தது. எனது குரு தனிப்பட்ட ஆர்வத்துடன், எனக்கு ஒருவருக்கு மட்டுமே கவனம் செலுத்தினார். அவர் நடத்திய இரு வகுப்புகளில் கலந்துகெ £ண்டவுடன் நான் முடிவு செய்துவிட்டேன். இதை கற்றே ஆக வேண்டும் என்று.
குரு சிஷ்யன் உறவு குறித்து கேள்வி பட்டிருக்கிறேன். இது போன்ற பாரம்பரிய இசையை முழு ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்ள இந்த குரு சிஷ்யா முறை மிகவும பயனுள்ளதாக இருந்தது. இசைக்கும் எனக்கும் இடையில் குரு தான் தூதுவராக இருந்து செயல்பட்டார்.
நான் ஒரு இந்தியரில்லை. நான் இங்கு மாணவியாக வந்தபோதும் எனது மன நிலைமை வேறாக இருந்தது. 5 அல்லது 6 வயதில் நான் படிக்க வந்திருந்தால் சிரமம் இருந்திருக்காது. ஆனால் நான் 19 வயதில் எனது மனமும், பழக்க வழக்கமும் ஒரு கலாச்சாரத்திற்குள் அடங்கிவிட்ட சூழ்நிலையில் இங்கு வந்தேன்.
குருவின் குடும்பத்தார் என் மீது அதிக அக்கறை கொண்டு எனக்கு நிறைய உதவி புரிந்தார்கள். இசை பயின்ற அனைத்து நேரங்களிலும் குருவின் உதவி எனக்கு மிகுதியாக இருந்ததை உணர முடி ந்தது. இத்தகைய குரு எனக்கு கிடைத்தது ஒரு பெரிய பரிசு தான்.
வேறு கலாச்சாரத்தில் வளர்ந்த நான் கர்நாடகா இசையில் நான் சாதித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. யாரை போலவும் நான் பாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பயிலும் போது ஒரு ஆசிரியர் நன்றாக அமைவார். சரியில்லை என்றால் நான் வேறு ஆசிரியரை தேடிச் செல்ல நேரிடும். ஆனால், எவ்வித சிரமமுமின்றி, எனது வெற்றிக்கு பின்னார் குரு டி.எம்.கிருஷ்ணா இருந்தார். இது போன்ற சந்தர்ப்பம் யாருக்கும் அமையுமா என்பது தெரியவில்லை.