5 மாநிலங்களில் ரூ.57 கோடி பறிமுதல் – தமிழகத்தில்தான் அதிகம்

57croes1

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் பறக்கும்படை அதிகாரிகளும், கண்காணிப்புக் குழுவினரும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.22.75 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அசாமில் ரூ.12.33 கோடியும், மேற்கு வங்கத்தில் ரூ. 11.90 கோடியும், கேரளாவில் ரூ. 10.20 கோடியும், புதுச்சேரியில் ரூ. 60.88 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.