Warning: sprintf(): Too few arguments in /mnt/stor14-wc1-dfw3/www.patrikai.com/web/content/wp-content/themes/covernews/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

5 ரூபாயில் மோடியை சந்திக்கும் வாய்ப்பு!

--

டில்லி:

‘நமோ ஆப்’ பயன்படுத்தி பாஜக-விற்கு நன்கொடை அளித்தால் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறலாம்.

கடந்த 2015-ம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொள்ளும் பொருட்டு ‘நமோ ஆப்’ (நரேந்திர மோடி – NaMO) துவக்கப்பட்டது. இதில், பிரதமரின் உரையாடல்கள் இடம் பெற்றிருக்கும். மேலும், அவரை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாகவும் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்-பில், புதிதாக ஒரு சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, ‘நமோ ஆப்’ மூலம் யார் வேண்டுமானாலும் பாரதிய ஜனதா கட்சிக்கு 5 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை நன்கொடையாக வழங்கலாம்.

அவ்வாறு இந்த செயலி மூலம் நன்கொடை அளிக்கும்போது நமக்கு ஒரு பரிந்துரை குறியீடு வரும். அந்த குறியீட்டை நமக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி அவர்களையும் பா.ஜ.க.விற்கு நன்கொடை அளிக்க பரிந்துரைக்கலாம்.

நாம் அனுப்பிய பரிந்துரை குறியீட்டை பயன்படுத்தி மேலும் 100 பேர் நன்கொடை அளித்தால், நமக்கு பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும், என பா.ஜ.க-வின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மற்றும் பொது மக்களுக்கு இடையிலான தொடர்பை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஒருவேளை, நமக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை குறியீட்டை பயன்படுத்தி வெறும் 10 பேர் மட்டும் நமோ ஆப் மூலம் நன்கொடை அளித்திருந்தால் நமக்கு டி-ஷர்ட் அல்லது தேநீர் கோப்பைகள் பரிசாக கிடைக்கும்.

வரும் 2019-ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.