ரவுண்ட்ஸ்பாய்:
ர்ணான்னு நமக்கு ஒரு தோஸ்து. ரொம்ப அப்பாவி மாதிரி இருப்பாரு. ஆனா கில்லாடித்தனமா கேள்வி கேப்பாரு  பலதடவ,  அப்படியே நான் ஷாஷாக் ஆகியிருக்கேன்.
இன்னிக்கும் அப்படித்தான்.
aa
போன் பண்ணவரு, “ஏம்பா,  ரவுண்ட்ஸ்! நோட்டெல்லாம் மாத்திட்டியா”னு கேட்டாரு.
“அட.. நானென்ன கோடி கோடியாவா வச்சுருக்கேன். மாச சம்பளத்தையே மாத்தவே நாலு தடவ பேங்க் போயிட்டு வந்திருக்கேன்”னு சொன்னேன்.
அதுக்கு அவரு, “மாச சம்பளத்தை மாத்தவே இவ்ளோ கஷ்டப்படுறியே… சில மாசத்துக்கு முன்னால சேலத்துல ரயில்ல பல கோடிக்கு மேல  கொள்ளையடிச்சதா நியூஸ் வந்துச்சே.. அந்த கொள்ளையருங் எங்கபோயி மாத்துவாங்க, பாவம்!” ன்னு  நக்கலா சொன்னாரு கர்ணா.
மண்டையிலே படேர்னு அடிச்ச மாதிரி இருந்துச்சு..
ஆமாம்ல…!
அந்த கொள்ளை  விவரத்த தெரிஞ்சுக்க பழைய பேப்பர் கட்டை எடுத்து பொறட்டுனேன்.
கொள்ளை நடந்தது ஆகஸ்ட் 8ம் தேதி.
சேலத்துலேருந்து எழும்பூர் வர்ற எக்ஸ்பிரஸ் ரயிலுல, நடந்த கொள்ளை அது.
சேலம் பகுதியில இருக்குற பேங்க்குகள்ல இருந்து சேகரிச்ச  சேதமான, செல்லாத நோட்டுங்கள சென்னையில இருக்கிற ரிசர்வ் பங்க்ல..ஸாரி, பாங்க்ல கொண்டுவந்து அந்த பணத்தை சேக்கணும்.
226 மரப்பெட்டிகள்ல 345 கோடி ரூவா!
160809145102_salem_money_train_loot_512x288__nocredit
மறுநாள் சென்னைக்கு ரயில் வந்தோன, ரிவர்ஸ் வங்கி… ச்சே… ரிசர்வ் வங்கி அதிகாரிங்க வந்து குறிப்பிட்ட பெட்டியோட கதவ தொறந்து போறாங்க.   அடக் காலக்கொடுமையே… அவங்களுக்கு முன்னாலேயே யாரோ கூரைய தொறந்து பணத்த களவாண்டுட்டு போயிட்டாங்க!
இத்தனைக்கும்  அதே ரயிலுல பணத்துக்கு பாதுகாப்ப பக்கத்து பெட்டியிலேயே போலீஸ் காரவுங்க கும்பலா வந்திருக்காங்க… பாவம், கொள்ளை போனது அவங்களுக்குத் தெரியல.
இதுல ஆறுதல் என்னனா… கொண்டுவரப்பட்ட முன்னூத்து சொச்ச பணத்தையும் நம்ம போலீசு காணா அடிக்கலை. வெறும் 5.75 கோடி ரூபாயத்தான் காணா அடிச்சுபுட்டாங்க.
ஆனாலும் இது பெரிய விசயம்தானே.
லோக்கல் போலீசு, ரயில்வே போலீசு, சீ.பி.சி. அய்.டி. போலீசுனு பலபேரு துப்பறிஞ்சுட்டாங்க.. யாரு கொள்ளையடிச்சது. அந்த பணம் என்னாச்சுன்னு இன்னிவரைக்கும் தெரியல!
பேப்பர பொரட்டி இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு கர்ணாவுக்கு போன் பண்ணேன்.
“ஆமாம்பா…  நீ கேட்டது சர்தான். அந்த கொள்ளையர் சாருங்க எந்த பேங்க்ல மாத்தியிருப்பாங்க..”னு கேட்டேன்.
பதிலுக்கு கர்ணா, “எங்கிட்ட கேட்டீனா நான் என்ன சொல்றது.. நீதானே பெரிய பிஸ்தா மாதிரி பேசுவே”னு கலாய்ச்சாரு.
00 அப்புறம் ரோசனை பண்ணி பார்த்துட்டு கர்ணாகிட்ட சொன்னேன்:
“திருடத்தெரிஞ்சவனுக்கு தெத்தத் தெரியாதானு ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க. அதாவது திருடுறவனுக்கு அதை காப்பாத்தி கரை சேர தெரியாதானு அர்த்தம்.
அந்த மாதிரி அவங்கல்லாம் இந்நேரம் நல்ல நோட்டா மாத்தியிருப்பாங்கப்பா..  நம்மள மாதிரி பாவப்பட்டவங்கதான் சிரமப்படணும்”னேன்.
“அப்படியா சொல்றே”னு கேட்டாரு கர்ணா.
“ஆமாம்பா.. கருப்பு பணம் வச்சிருக்கறனெல்லாம் மாத்தாமயா இருக்கான்.. அதே மாதிரி அந்த கொள்ளையர் சாருங்களும் இந்நேரம் நல்ல நோட்டா மாத்தியிருப்பாங்கப்பா”  அப்படின்னேன்.
“பாரத் மாதா கீ ஜெய்”னு சொல்லிட்டு போனை வச்சுட்டாரு கர்ணா.